முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணியின் பட்டியல் இதுதான் ; அப்போ வெற்றி தான் ;

நாளை மதியம் 1:30 மணியளவில் இருந்து தொடங்க உள்ளது பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு தான் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதிலும் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

தொடரை கைப்பற்றுமா இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். முக்கியமான வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் யார் ப்ளேயிங் 11 ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல குழப்பங்கள் எழுந்துள்ளன. 11 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி ;

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் தான் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஷிகர் தவான், ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானதால் வேறு வழியில்லை.

மிடில் ஆர்டர் :விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. ஆமாம்…! நான்கு வீரர்களில் ஏதாவது இருவர் ஆட்டமிழக்காமல் விளையாடினால் நிச்சியமாக அதிக ரன்களை கைப்பற்ற முடியும்.

ஆல் -ரவுண்டர் :தீபக் சஹார் மட்டும் தான் உள்ளார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தீபக் சஹார் , தான் ஒரு ஆல் -ரவுண்டர் என்பதை நிரூபித்துவிட்டார்.

பவுலிங்: யுஸ்வேந்திர சஹால் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷர்டுல் தாகூர், அவேஷ் கான் அல்லது பிரஷித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

சில வாரங்களுக்கு முன்பு சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை சந்தித்தது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.