இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? இல்லையா ?….. முழு விவரம்…!

0

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் புனே மைதானத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தனர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் சர்மா நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 317 ரன்களை எடுத்துள்ளது, இந்தியா கிரிக்கெட் அணி. 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜேசன் ராய் 46 ரன்கள், பரிஸ்டோவ் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆடடம் இழந்தனர்.

அதன்பின்னர் இங்கிலாந்து அணிக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் 42.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியின் வீரர்கள் 251 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். அதனால் இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா கிரிக்கெட் அணி. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்தியா கிரிக்கெட் அணி.

Read More: இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டி பார்க்க முடியாத !! சோகத்தில் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ…!

இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை மதியம் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா?? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வீசிய பந்தில் ரோஹித் ஷர்மாவின் வலது முழங்கையில் அடிபட்டுவிட்டது.

இருந்தாலும் முதல் உதவி பெற்று கொண்டு மீண்டும் பேட்டிங் செய்தார் ரோஹித் சர்மா. இருப்பினும் அவரால் அதிக ரன்கள் எடுக்க முடியமால் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போதும் ரோஹித் ஷர்மாவால் பீல்டிங் செய்ய முடியவில்லை. அதனால் இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் அவருக்கு பதிலாக பீல்டிங் செய்தார்.

நாளை நடைபெற போகிறார் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? இல்லையா??? என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், ரோஹித் சர்மாவுக்கு எதுவும் இல்லை அதனால் நாளை அவர் போட்டியில் இருப்பர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here