வீடியோ ; சிஎஸ்கே அணியின் புதிய டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்திய தோனி …சந்தோஷத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தொடங்க உள்ளது ஐபிஎல் போட்டிகள். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் தான் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி நடக்க போகின்ற முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்த நிலையில் எல்லா அணிகளும் அவரவர் புதிய ஆடையை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதேபோல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் சிஎஸ்கே அணியின் டி -ஷர்ட்டை அறிமுகம் செய்துள்ளார்.

Read More: சுயநலம் இல்லாத மனிதர்..! போட்டியின் போது தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பர் – நன்றி தெரிவித்த கோலி .. யார் அவர் ?

சென்னையில் பயிற்சி செய்து வந்த சிஎஸ்கே அணியின் வீரர்கள் மும்பை சென்றுள்ளனர். ஏனென்றால் சிஎஸ்கே அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்ள போகிறது. இந்த இருவருக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் சிஎஸ்கே அணி சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பாஜன் சிங் ஆகிய இருவரும் அவரவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஏஎல் 2020 போட்டிகளில் விளையாட முடியமால் போய்விட்டது.

அதனால் கடந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, ஹரி சங்கர் ரெட்டி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய வீரர்கள் புதிதாக அணியில் இணைந்துள்ளனர். அதனால் நிச்சியம் இந்த ஆண்டு சிறப்பான அணியாக சிஎஸ்கே அணி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.