ஐபிஎல் 2021 ; 11 பந்தில் 6 சிக்சர் அடிப்பார் ; தினேஷ் கார்த்திக் புகழாரம்

வருகின்ற ஐபிஎல் 2021 போட்டிகள் பாருள் 9ஆம் தேதி தொடங்க உள்ளதால். ஐபிஎல் வீரர்கள் அவரவர் அணியில் இணைந்து பயிற்சியை ஆரம்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல எதிர்ப்புகளை தாண்டி ஐக்கியஅரபு நாட்டில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிசிசிஐ , அனைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்களிடம் கூறியுள்ளது.

முதல் ஐபிஎல் 2021 போட்டியில், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மொத உள்ளன. அதனால் தீவிரமான பயிற்சியை செய்து வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் ; எங்க அணியில் ஆல் -ரவுண்டர் ஆன்ட்ரே ரசல் ஒரு திறமையான வீரர். இறுதி நேரத்தில் சிக்சர் மழை பொழியும்.

2016ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் 14 போட்டிகளில் விளையாடிய ரசல் 510 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 90 ரன்களை சரமாரியாக அடித்து கொல்கத்தா அணியின் பல வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் ரசல்.

அவரது இறுதி நேரத்தில் இருக்கும் அதிரடியான ஆட்டம் பார்க்கும் அனைவரையும் வியக்கவைக்கும் என்றே சொல்லலாம். 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அவரது ஆட்டம் மிகவும் அருமையான ஒன்றாகும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

2019ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய முகமத் சிராஜ் கையில் அடிபட்டதால் ஆஸ்திரேலியா அணியின் வீரர் மார்கஸ் ஸ்டானிஸ் வீசிய மூன்று பந்தில் இரு சிக்சர் அடித்துள்ளார் ரசல்.

அதன்பின்னர் ரசல் எதிர்கொண்ட இரு சூழல் பந்து வீச்சாளரின் 11 பந்தில் 6 சிக்சர் அடித்துள்ளார் ஆன்ட்ரே ரசல். அதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது, ஆனால் இந்த ஆண்டு போட்டி இந்தியாவில் தான் முடிவு ஆகிவிட்டது. அதனால் அவரது ஆட்டம் இந்த ஆண்டு இருக்கும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.