எப்படியோ..! இறுதியாக சென்னை அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ; இனி பையன் பட்டைய கிளப்ப போகிறேன் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதுவும் இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் மொத்தம் 10 அணிகளை கொண்டு ஐபிஎல் 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் விறுவிறுப்பான நிகழ்வுக்கு நிச்சியமாக பஞ்சம் இல்லை. ஐபிஎல் போட்டி வந்தாலே போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் 11 பற்றி பேசுவது வழக்கம் தான்.

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் 11ல் சிறப்பான வீரர்கள் இருந்த காரணத்தால் தான் ஐபிஎல் 2021 சாம்பியன் படத்தை வென்றது சிஎஸ்கே அணி. அதிலும் குறிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் தான் முக்கியமான காரணம் என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் டி-20 2021 போட்டிகளில் கிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் ருதுராஜ். என்ன தான் திறமை இருந்தாலும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வருகிறார் ருதுராஜ். இருப்பினும் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரூட்டுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரூட்டுராஜ் கெய்க்வாட்-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அதனால் ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா ?? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அதனால் கூடிய விரைவில் ருதுராஜ் பயிற்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனால் சிறப்பான தொடக்க ஆட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2020யில் சென்னை அணியில் அறிமுகம் ஆனார். தொடக்கத்தில் சில போட்டிகளில் எந்த ரன்களையும் அடிக்காத நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால், கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக ரன்களான 635 ரன்களை அடித்துள்ளார். அதில் ஒரு சதம் அடங்கும்…!