சுட்டி குழந்தை சாம் கரன் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் இடம்பெறவில்லை ; காரணம் இதுதான் ; அப்போ சிஎஸ்கே பிளான் அவ்வளவு தானா ?

ஐபிஎல் 2021 இறுதி போட்டி நடக்க தொடங்கிய போது , அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 யில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்ய போவதாக பிசிசிஐ கூறியுள்ளது.

அதன்படி சமீபத்தில் தான் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதனால் இந்த முறை ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளனர். அதுவும் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள இரு அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி நவம்பர் இறுதியில் தக்கவைத்து வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. பின்னர் ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்களில் புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரு இந்திய வீரர்களை அணியில் எடுக்க அனுமதி கொடுத்துள்ளது பிசிசிஐ.

அதன்படி நேற்று தான் அகமதாபாத் மற்றும் லக்னோ கைப்பற்றிய வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதில் லக்னோ அணியில் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ரவி பிஸோனி அணியில் இடம்பெற்றுள்ளனர். அகமதாபாத் அணியில் கேப்டனாக ஹார்டிக் பாண்டிய , ரஷீத் கான், மற்றும் சுமன் கில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சில ஆண்டுகளாக ஆல் ரவுண்டராக வலம் வந்தார் சாம் கரன். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் தக்கவைக்கப்படவில்லை. ஆனால் இதனை பற்றி பேசியக் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் நிச்சியமாக சிஎஸ்கே வீரர்களை மீண்டும் அணியில் கைப்பற்றுவோம் என்று.

ஆனால், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஆர்ச்சர் போன்ற இங்கிலாந்து வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட போவதில்லை. ஆமாம்…! அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டியிலும் மற்றும் அவர்கள் உள்ளூர் விளையாட்டில் கவனம் செலுத்த போவதாக கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பை இழந்தால் பின்னர் வாய்ப்பு கிடைப்பது மிகவும் சிரமம் என்பதில் சந்தேகமில்லை. ஆமாம்… !!! இந்த முறை யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.