மூன்று மாற்றங்களுடன் களமிறங்க போகும் இந்திய அணி-யின் விவரம் இதோ ; இனி இவங்களுக்கு வாய்ப்பு இல்லை ; முழு விவரம் இதோ ;

நாளை மதியம் 2 மணியளவில் தென்னாபிரிக்கா அணியும் இந்திய அணியும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.

மூன்றாவது போட்டியில் ஆவது இந்திய அணி வெற்றி ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்திய அணியில் ஏன் விளையாடாத வீரர்களை ப்ளேயிங் 11ல் தேர்வு செய்து வருகின்றனர் ?

ஆமாம்….! முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 31 ரன்கள் அடிக்க முடியமால் தோல்வியை சந்தித்தது. அதற்கு முக்கியமான காரணம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து இரு போட்டிகளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

ஆனால் அதில் அவரவர் திறமையை வெளிப்படுத்தாமல் இந்திய அணிக்கு பாரமாக மாறியுள்ளது தான் உண்மை.வெங்கடேஷ் ஐயர் 2,22 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 17, 11 ரன்களை அடித்துள்ளார்கள். இதற்கு மேல் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து கொண்டு வந்தால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பகுதி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களை தொடர்ந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 8 ஓவர் பந்து வீசி 67 ரன்களை கொடுத்த நிலையில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. புவனேஸ்வர் இரண்டாவது போட்டியில் மட்டுமின்றி முதல் போட்டியிலும் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

அதனால் நிச்சியமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இவர்கள் இருவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் , ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷான் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சாஹர் அல்லது முகமது சிராஜ் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது..! என்ன செய்ய போகிறார் இந்திய அணியின் புதிய கேப்டனான கே.எல்.ராகுல் ?

இறுதி போட்டியில் ஆவது மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ?? இல்லை அதே வீரர்களை வைத்து மீண்டும் தோல்வியை சந்திக்க போகிறதா இந்திய அணி ? இந்திய அணியில் யாருக்கு பதிலாக யார் இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!