தல தோனியை நினைவுபடுத்திய இளம் வீரரின் சிக்ஸர் ; அப்படியே தோனி மாதிரியே இருக்கு…! வைரலாகும் வீடியோ பதிவு;

கடந்த 5ஆம் தேதி அண்டர் 19 உலகக்கோப்பை இருந்து போட்டி நடைபெற்றது. அதில் டாம் தலைமையிலான இங்கிலாந்து அணியும், யாஷ் தூள் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ஆனால் ஜேம்ஸ் ரெவ் அதிரடியான ஆட்டத்தை விளையாடினார். அவருக்கு பார்ட்னெர்ஷிப் செய்ய யாரும் இல்லாமல், தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. அதனால் 44.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து வேறும் 189 ரன்களை மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. தொடக்க வீரரான ரகுவன்ஷி எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ் பாவா போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை அடித்ததால் 47.4 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 195 ரன்களை கைப்பற்றியது இந்திய.

அதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கைப்பற்றி உலகக்கோப்பையையம் வென்றது. இந்த ஆண்டுடன் சேர்த்து மொத்தம் ஐந்து முறை அண்டர் 19 உலகக்கோப்பை இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி போட்டியில் நடந்த ஒரு நிகழ்வு 2011ஆம் உலகக்கோப்பை போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் நியாபகர்த்திற்கு வருகிறது.

ஆமாம் ..! 2011ஆம் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதின. இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி, ரன்களை அடித்து கொண்டு வந்தது. பின்னர் இறுதி நேரத்தில் கேப்டனான மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

அதேபோல தான் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் இமை வீரரான தினேஷ் பான 46.3 ஓவரில் களமிறங்கினார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய தினேஷ் பானா சரியாக 47.4 வது பந்தில் சிக்ஸர் அடித்ததில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை கைப்பற்றியது.

2011ஆம் தோனி எப்படி போட்டியை முடித்தாரோ, அதேபோல இளம் வீரரான தினேஷ் பானா சிக்ஸர் அடித்து வெற்றியை கைப்பற்றினார். அவரது புகைப்படும் இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தினேஷ் பானா 5 பந்தில் 13 ரன்களை அடித்துள்ளார். அதில் இரு சிக்ஸர் அடங்கும்.