அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம் ; என்னுடைய பலம் இதுதான் ; இப்படி தான் விளையாடுவேன் ; இஷான் கிஷான் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிகள் இன்று மதியம் 1 மணியளவில் தொடங்க உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றனர்.

முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 9 ரன்களை அடிக்க முடியாமல் தோல்வி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டி அதற்கு மாற்றாக நடைபெற்று முடிந்துள்ளது. தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 278 ரன்களை அடித்தனர்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணி அதனை 45.5 ஓவரில் அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் இஷான் கிஷான் 93 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 113* ரன்களை அடித்தது தான். இன்றைய போட்டியில் வெல்லும் அணி தான் இறுதியாக கோப்பையை வெல்ல முடியும்..!

இந்திய அணியின் தொடக்க வீரர் :

கடந்த பல போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் (ரோஹித் சர்மா)வுடன் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வந்தார் இளம் வீரரான இஷான் கிஷான். ஆனால், அவ்வப்போது மட்டுமே அதிரடியாக விளையாடி வந்தார். தெடர்ந்து அவரது ஆட்டத்தை சரியாக இல்லாத காரணத்தால் இஷான் கிஷான் -க்கு பதிலாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ளார். முதல் போட்டியில் 20 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் 93 ரன்களை விளாசியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஷான் கிஷானிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

எப்பொழுதும் பெரிய ஷாட்ஸ் அடிக்க தான் பாக்குறீங்க .துணை வீரர் (ஸ்ரேயாஸ் ஐயர்) -க்கு சிங்கிள்ஸ் ஸ்ட்ரைக் கொடுக்கலாம் .! என்று கேள்வி கேட்கப்பட்டது..! அதற்கு பதிலளித்த இஷான் கிஷான் ; “சில வீரர்களுக்கு சிங்கிள்ஸ் ஓடுவது சுலபமாக இருக்கும் அது அவர்களுது பலம். ஆனால், எனக்கு சிக்ஸர் அடிப்பது தான் என்னுடைய பலம். அதுமட்டுமின்றி, என்னால் சுலபமாக சிக்ஸர் அடிக்க முடியும், மற்ற வீரர்கள் செய்ய முடியாத விஷயத்தை நான் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் இஷான் கிஷான்.”