டெல்லி அணியின் அதிரடி மன்னன் அணியில் சேருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் ; எப்படி சமாளிக்க போகிறது டெல்லி அணி ;

சென்னை , மும்பை அணியை போலவே இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 177 ரன்களை அடித்தது மும்பை. பின்பு 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மந்தீப் சிங், ரிஷாப் பண்ட், பவுல் போன்ற வீரர்களின் பேட்டிங் ஏமாற்றத்தை கொடுத்தாலும், மற்ற வீர்ரகள் ரன்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.

ஆமாம், 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த டெல்லி அணி 179 ரன்களை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடி வந்த வார்னருக்கு கடந்த ஆண்டு அணியில் மிகவும் மோசமான நிலை உருவானது. அதனால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் இந்த முறை மெகா ஏலம் நடைபெற இருந்த காரணத்தால் அணியில் இருந்து வெளியேறினார்.

என்னதான் கடந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகளில் மோசமாக விளையாடிருந்தாலும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியது வார்னர் தான். இந்த ஆண்டு மெகா ஏலத்தில் பங்கேற்ற வார்னர் 6.25 கோடி விலை கொடுத்து டெல்லி அணி கைப்பற்றியுள்ளது.

பிறகு ஏன் முதல் போட்டியில் டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கவில்லை ? அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரால் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி அணியில் சேர போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் மோத உள்ளனர்.

அதில் இடம்பெறுவாரா ? வார்னர் ? முதல் போட்டி முடிந்த பிறகு ரிஷாப் பண்ட் கூறுகையில் ; எங்கள் அணியில் சில முக்கியமான பேட்ஸ்மேன் (வார்னர்) போன்ற வீரர்கள் அணியில் இடப்பெறவில்லை. அவர்கள் அணியில் இருக்கும் பட்சத்தில் நிச்சியமாக வலுவான பேட்டிங் இருக்கும் என்று கூறியுள்ளார்..!