இவரை பார்த்து தோனிக்கு பயமா ?? இவருடைய பந்து வீச்சில் ஏன் தோனி ரன்களை அடிக்கவில்லை ;

0

ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார்.

40 வயதான மகேந்திர சிங் தோனி சரியாக ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கும் முன்பு நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாகவும், அந்த கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுத்துள்ளார் தோனி. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. இருப்பினும் தோனி கேப்டன் பதிவியில் இருந்து விலகியதை பற்றி அனைவருக்கு அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

அதில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா. இருப்பினும் அதில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் யாரும் சரியாக ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். ஆனால் மகேந்திர சிங் டோனி தான் அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 50 ரன்களை அடித்தார்.

அதனால் தான் சென்னை அணிக்கு ரன்கள் வந்தது. இருப்பினும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் நரேன் பந்து வீச்சில் மட்டும் தோனி தயக்கம் காட்டிக்கொண்டு வந்தார் என்பது தான் உண்மை. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நரேன் வீசிய 8 பந்தை எதிர்கொண்ட தோனி 4 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நரேன் தோனிக்கு வீசிய 66 பந்தில் 35 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதில் வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே உள்ளது. அதனால் நரேன் வீசிய பந்து தான் தோனிக்கு ஆபத்தா ?? அல்லது சுழல் பந்து வீச்சு என்றாலே தோனிக்கு ஆபத்தா ?? என்று தெரியவில்லை.

சென்னை அணிக்கு நாளை இரவு லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. அதில் ஆவது சென்னை அணி வெற்றியை கைப்பற்றுமா ?? இல்லையா ?? தோனியின் பேட்டிங் சென்னை அணிக்கு முக்கியமானதா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here