தோனியை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த் …. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்….!!

ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் ஆரம்பித்து ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல திருபங்களுடன் இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 37 போட்டிகளில் முடிந்துள்ளது.

37வது போட்டி : மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கிய சிஎஸ்கே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் குரான் மற்றும் டுபலஸிஸ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாம் குரான் 22 ரன்களிலும் , டுபலஸிஸ் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த வாட்சன் 8 ரன்களிலும் ,ராயுடு 13 ரன்களிலும் , தோனி 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் எடுத்த நிலையில் 125 ரன்களை சேர்த்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதன்பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களிலும் ,உத்தப்ப 4 ரன்களிலும் ,சாம்சன் 0 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஜோஸ் பட்லர் 70 ரன்களிலும் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் போட்டியில் வெற்றி பெற்றனர்.

15 பந்துகள் மீதமுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழந்த நிலையில் ஆட்டத்தை வெற்றிபெற்றது ஸ்டீவ் ஸ்மித் அணி.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2020யில் இறுதி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. அதுமட்டுமின்றி 10 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தோனியை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த் …. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்….!!

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. அதன்பின்னர், தோனி அளித்த பேட்டியில் இளம் வீரர்களுக்கு போர்ஸ் இல்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்ட இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் … ஸ்ரீகாந்த் :: ஜெகதீசன் முதல் போட்டியில் 30+ ரன்களை எடுத்துள்ளார். அதன்பிறகு அவரை அணியில் விளையாடவில்லை. கேதர் ஜாதவை விட ஜெகதீசன் சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் தோனி தோல்விக்கு சாக்கு போக்கு சொல்லுகிறார் என்று கூறியுள்ளார். இவரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.