டெல்லி அணியை தொம்சம் செய்த பஞ்சாப் அணி…. வெற்றியை கைப்பற்றியது …..!!!

ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஐபிஎல் 2020யில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 12 ஆண்டுகளில் இதுவரை ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் போட்டி இதுதான்..!!

38வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரிதிவி ஷா 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்கள் , பாண்ட் 14 ரன்கள் ,ஸ்டோனிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஆனால் முதலில் பேட்டிங் செய்த தவான் சதம் அடித்து டெல்லி அணிக்கு அதிகமாக ரன்களை எடுத்து கொடுத்தார்.

20ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்து 5 விக்கெட் இழந்த நிலையில் ஆட்டம் முடித்தனர். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் பேட்டிங் சரியாக செய்யவில்லை ராகுல் 15 ரன்கள் ,மயங்க அகர்வால் 5 ரன்கள், கிறிஸ் கெய்ல் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி தோல்வி என்ற நினைத்த போது பூரான் மற்றும் மஸ்வெல் இருவரும் இணைந்து 80+ மேற்ப்பட்ட ரன்களை எடுத்து பஞ்சாப் அணிக்கு நல்ல ஒரு ஆதரவாக இருந்தது. 1 ஓவர் மீதமுள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி.