அன்று நடராஜனுக்கு பண்ணாங்க..! இன்று நாங்க ஆண்டர்சனுக்கு பண்ணுனோம்..! ஷர்டுல் தாகூர் ; முழு விவரம் ;

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டியில், நான்கு போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐந்தாவது போட்டியை ரத்து செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ. அதற்கான காரணம் ; இந்திய அணியில் சிலருக்கு கொரோனா உறுதியானது.

அதுமட்டுமின்றி, நான்கு போட்டிகளில் 2 – 1 இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகிரகில் மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக நான்காவது போட்டி தான் மறக்க முடியாதா ஒன்று.

ஏனென்றால் 50 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் மைதானத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் அந்த போட்டியை பற்றிய கேள்விகள் பல எழுந்தது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்டுல் தாகூரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஷர்டுல் தாகூர்; கடந்த ஆண்டு 2020 இறுதியில் ஆஸ்திரேலியா அணியை எதிர் விளையாடும் போது இந்திய அணியின் பவுலர் நடராஜன் பேட்டிங் செய்தார். அவருக்கு பேட்டிங் அந்த அளவுக்கு வராது என்று தெரிந்தும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகிய இருவரும் அவருக்கு பவுன்சர் வீசினார்கள்.

அவர்களே பவுன்சர் வீசும், போது பும்ரா ஏன் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சனுக்கு வீச முடியாது ? நாங்கள் விளையாட தான் வந்தோம், யாரையும் மகிழ்விக்க இல்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ஷர்டுல் தாகூர். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் தான் அதிக ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 368 ரன்கள், கே.எல்.ராகுல் 315 ரன்களை அடித்துள்ளனர். அதே நேரத்தில் வெறும் இரு போட்டிகளில் விளையாடிய ஷர்டுல் தாகூர்.

117 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் குறிப்பாக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இரு இன்னிங்ஸ் போட்டியிலும் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, இப்பொழுதெல்லாம் இந்திய அணியின் ஆல் -ரவுண்டராக மாறியுள்ளார் ஷர்டுல் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.