டெஸ்ட் போட்டி :
கடந்த ஜூலை 1 ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தொடங்கினார்கள். அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
முதல் இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு மழை காரணமாக தொடக்க ஆட்டம் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி முக்கியமான வீரர்களான விராட்கோலி, ஹனுமா விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். ஆனால் ரிஷாப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது.
அதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 416 ரன்களை அடித்துள்ளது இந்திய. பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணியை போலவே தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. பெரிய அளவில் யாரும் ரன்களை அடிக்காமல் திணறியது இங்கிலாந்து அணி. ஆனால் அந்த நேரத்தில் தான் பரிஸ்டோவ் வெறித்தனமாக பேட்டிங் செய்ய ஆரம்பித்தார்.
சதம் அடித்த பரிஸ்டோவ் நிச்சயமாக ஆட்டம் இழக்காமல் ரன்களை அடிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமான விராட்கோலி-கையுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டத்தை இழந்தார் பரிஸ்டோவ். அதனால் 61.3 ஓவர் முடிவில் 284 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டை-யும் இழந்தது இங்கிலாந்து அணி.
அதனால் இந்திய அணி 132ரன்கள் முன்னிலையில் உள்ளது. இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. அதில் வழக்கம் போல ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுமன் கில் விளையாடிய மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது..! முதல் இன்னிங்ஸ்-யிலும் சுமன் கில் 17 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
சுமன் கில் கடந்த ஆண்டு 2021யில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 478 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதாவது சராசரியாக ஒரு போட்டிக்கு 28 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை அடித்துள்ளார் சுமன் கில். ஒரு அணியில் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்தால் நிச்சியமாக அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்..!
இதற்கு பிறகு சுமன் கில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கினால் சரியாக இருக்குமா ?? இல்லையா ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகிறது. அதனால் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!