யாரு சாமி நீ ? இந்திய அணிக்கு பயத்தை காட்டிய ஜிம்பாபே பேட்ஸ்மேன் ; பா..! என்ன அடி..! பட்டைய கிளப்பிவிட்டார் ;

இந்திய மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றி 3 – 0 என்ற கணக்கில் ஜிம்பாபே அணியை வாஷ் -அவுட் செய்துள்ளது இந்திய.

மூன்றவது போட்டியின் சுருக்கம் :

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்து அதிகப்படியான ரன்களை அடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி முதலில் களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பின்னர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 289 ரன்களை அடித்துள்ளனர். அதில் ஷிகர் தவான் 40, கே.எல்.ராகுல் 30, சுப்மன் கில் 130, இஷான் கிஷான் 50, சஞ்சு சாம்சன் 15 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாபே அணி. தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ரச ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை குவித்தனர்.

அதிலும் சிக்கந்தர் ரச அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் 115 ரன்களை அடித்துள்ளார். இவரது ஆட்டம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது தான் உண்மை. விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறிக்கொண்டு வந்தது இந்திய.

115 ரன்களை அடித்த சிக்கந்தர் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை. இறுதிவரை விளையாடிய ஜிம்பாபே அணி 276 ரன்களை அடித்தனர். வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது ஜிம்பாபே அணி. சிக்கந்தர் மட்டும் விக்கெட்டி இழக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக ஜிம்பாபே அணிக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமூகவலைத்தளங்களில் இந்திய அணியை வென்றதை விட ஜிம்பாபே வீரர் சிக்கந்தர் ரச அடித்த சதம் தான் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…!