இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின.
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
அதுவும் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக இருந்தது. இருப்பினும் மிச்சேல் மார்ஷ் விளையாடிய அதிரடியாக பவுண்டரிகளால் இந்திய அணியிக்கு பயத்தை காட்டினார்.
பின்பு 81 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார் மிச்சேல் மார்ஷ். அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்பு விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள் குறைவான ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
35.4 ஓவர் வரை விளையாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 188 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விளையாடி வருகிறது இந்திய.
ஆஸ்திரேலியா வீரர்களின் ஸ்கோர் :
டிராவிஸ் ஹெட் 5, மிச்சேல் மார்ஷ் 81, ஸ்டீவன் ஸ்மித் 22, மரன்ஸ் லபுஸ்சங்கமே 15, ஜோஷ் இங்கிலிஷ் 26, கேமரூன் க்ரீன் 12, க்ளென் மேக்ஸ்வெல் 8, மிச்சேல் ஸ்டார்க் 4* ரன்களை அடித்துள்ளனர்.
இந்திய அணியின் பலம் :
ஆசிய , டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் பவுலிங் வலுவாக இல்லாத காரணத்தால் இந்திய அணி பல போட்டிகளில் தோல்வியை பெற்றது. ஆனால் சமீப காலமாகவே இந்திய அணியின் பவுலிங் சிறப்பான முயற்சி முன்னேற்றத்தை கண்டுள்ளது தான் உண்மை.
அதேபோல தான் முதல் ஒருநாள் போட்டியில் ஷமி 6 ஓவர் பவுலிங் செய்து வெறும் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும், சிராஜ் 3 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டையும், குல்தீப் மற்றும் ஹர்டிக் பாண்டிய தலா ஒரு விக்கெட்டையும் பெற்றுள்ளனர்.