வீடியோ : முடிஞ்சா அடி பார்க்கலாம் ; இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை காட்டிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ;

0

IND vs SL : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற தொடங்கியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளனர். அதனால் இரு அணிகளுக்கும் நாளை நடைபெற உள்ள போட்டி நிச்சியமாக வாழ்வா சாவா என்ற நிலை தான். அதனால் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் மோசமான பவுலிங் :

நேற்று புனேவில் நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. உலகக்கோப்பை, ஆசியா கோப்பை போன்ற போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் நேற்று பவுலிங்-ல் சொதப்பினார்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆமாம், 2 ஓவர் மட்டுமே பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. அதுமட்டுமின்றி அதிகபட்சமாக ஐந்து நோ-பால் வீசியுள்ளார். இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை காட்டிய வேகப்பந்து வீச்சாளர் :

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியில் தேர்வாகிய வீரர் தான் உம்ரன் மாலிக். இவர் நேற்று நடந்த போட்டியில் 4 ஓவர் பவுலிங் செய்து 48 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அதிலும் இலங்கை அணியின் ஆல் – ரவுண்டரான ஹசரங்க விக்கெட்டை கைப்பற்றிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று தொடரை கைப்பற்றுமா ?? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here