பவுலிங்-ல் நான் கில்லிடா ; இலங்கை அணியின் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ; இந்திய அணி தொடரை வென்றுள்ளது ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரியான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளனர்.

மூன்றாவது போட்டியின் விவரம் :

இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சோர்வான தொடக்க ஆட்டம் அமைந்தது. முதல் இரு போட்டிகள் போல இல்லாமல் சுப்மன் கில் மற்றும் ராகுல் த்ரிபதியின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

இருப்பினும் மிடில்ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 229 ரன்களை அடித்தது இந்திய. அதில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 112*, சுப்மன் கில் 46,, ராகுல் திரிபதி 35, அக்சர் பட்டேல் 21* ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு மோசமான பேட்டிங் அமைந்தது. தொடக்க வீரர்களில் இருந்து இறுதிவரை சரியாக பார்ட்னெர்ஷிப் செய்ய முடியாமல் விக்கெட்டை தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்தனர்.

சரியாக 16.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. அதுமட்டுமின்றி டி-20 போட்டிக்கான தொடரையும் வென்றுள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷனாக 23, தன்ஜாயா 22,மெண்டிஸ் 23, பத்தும் நிசங்க 15 ரன்களை அடித்துள்ளனர்.

சிறப்பாக பவுலிங் செய்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் :

கடந்த இரண்டாவது போட்டியில் மோசமான நிலையில் பவுலிங் செய்தார் இந்திய அணியின் இளம் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷதீப் சிங். அவருக்கு மூன்றாவது டி-20 லீக் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா ?/ இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால் ஒரு மாற்றங்களையும் செய்யாமல் அதே இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியது.

ஆனால் இன்றைய (மூன்றாவது டி-20) போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் அர்ஷதீப் சிங். ஆமாம், 2.4 ஓவர் பவுலிங் செய்து 20 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாட கூடிய இலங்கை அணியின் கேப்டன் ஷனாக விக்கெட்டை கைப்பற்றியது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது.

டி-20 போட்டிக்கான தொடர் நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விளையாட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here