இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று தொடரையும் வென்றுள்ளனர்.
மூன்றாவது போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்ற போட்டிகளை காட்டிலும் மூன்றாவது டி-20 போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 229 ரன்களை அடித்தனர்.
அதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 46, ராகுல் திரிபதி 35, சூரியகுமார் யாதவ் 112*, அக்சர் பட்டேல் 21* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.
ஆமாம், தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். அதனால் 16.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இலங்கை அணியால் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது மட்டுமின்றி 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளனர்.
நல்லவேளை இவரது விக்கெட்டை கைப்பற்றிவிடீர்கள் :
இலங்கை அணியின் கேப்டன் மற்றும் ஆல் – ரவுண்டரான ஷனாக அதிரடியாக ரன்களை அடித்து வந்துள்ளார். ஆமாம் முதல் போட்டியில் 45, இரண்டாவது போட்டியில் 56* ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, நேற்றைய போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி கொண்டு வந்தனர்.
சரியாக கேப்டன் ஷனாக 9.4 ஓவரில் களமிறங்கினார். ஷனாக விக்கெட்டைகைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்தது இந்திய கிரிக்கெட் அணி. ஏனென்றால், அவர் (ஷனாக) மட்டும் ரன்களை அடிக்க தொடங்கிவிட்டால் நிச்சியமாக இலங்கை அணி சுலபமாக வெற்றியை கைப்பற்றிவிடும்.
ஆனால் 16வது ஓவரில் அர்ஷதீப் வீசிய பந்தை எதிர்கொண்ட ஷனாக கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதனால் இந்திய அணி அதிகபட்சமாக 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.