அசைக்க முடியாத மிடில் ஆர்டரின் பேட்ஸ்மேன்கள் ; ரன்களை அடித்து விளாசி வெற்றியை சுலபமாக கைப்பற்றியது இந்திய…!

0

போட்டி 4 : நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிசாகட் கான் தலைமையிலான ஹாங் காங் அணியும் மோதின. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது..!

டாஸ் மற்றும் இந்திய அணியின் பேட்டிங்:

இதில் டாஸ் வென்ற ஹாங் காங் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தாலும் ரன்களை அடிப்பதில் மட்டும் இந்திய வீரர்கள் சோர்வாகவே விளையாடி கொண்டு வந்தனர்.

பின்பு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 192 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 36, ரோஹித் சர்மா 21, விராட்கோலி 59, சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை அடித்துள்ளனர்.

இலக்கு மற்றும் ஹாங் காங் அணியின் பேட்டிங் :

193 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங் அணி. சொதப்பலான தொடக்க ஆட்டம் அமைந்ததால் ரன்களை அடிக்க முடியாமல் திணறியது ஹாங் காங் கிரிக்கெட் அணி. இருப்பினும் இந்திய அணியை போலவே வலுவாக இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடித்தனர்.

ஆனால் அவ்வப்போது விக்கெட்டை இழந்த ஹாங் காங் அணியால் ரன்களை அடிக்கமுடியாமல் போனது. இறுதி ஓவர் வரை விளையாடிய ஹாங் காங் அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 152 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தியது இந்திய.

அசைக்க முடியாத மிடில் ஆர்டர் :

நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய தொடங்கியதில் இருந்து மிக மிக பொறுமையாகவே விளையாடி கொண்டு இருந்தார். அதனால் கிட்டத்தட்ட 10 ஓவர் வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு குறைவான ரன்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் பார்ட்னெர்ஷிப் செய்ய தொடங்கியதில் இருந்து அதிரடியான ஆட்டம் தான்.

தொடர்ந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்கள். அதுமட்டுமின்றி, சூரியகுமார் யாதவ் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து 98 ரன்களை அடித்துள்ளனர். அதில் விராட்கோலி 59 ரன்களையும் , சூரியகுமார் யாதவ் 68 ரன்களையும் அடித்துள்ளனர்.

இதுபோன்ற பேட்டிங் மிடில் ஆர்டரில் இண்டிஹ்ய அணிக்கு அமைந்தால் நிச்சியமாக வலுவான பேட்டிங் அமையும் என்பதில் சந்தேகமில்லை. சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட்கோலியின் பார்ட்னெர்ஷிப் எப்படி இருந்தது ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ளே கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here