இலங்கை அணியை திணறடித்து இந்திய அணியின் கதாநாயகன் ; பா..! பேட்டிங் என்றால் இப்படி தான் இருக்கணும்;

0

இந்தியாய் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி ராஜ்கோய்-ல் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள்.

இதில் வழக்கம் போல தொடக்க வீரரான இஷான் கிஷான் 1 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்பு சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபதி ஆகிய இருவரும் இணைந்து அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியின் டி-20 கதாநாயகன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ரன்களை அடிக்க தொடங்கினார். பின்னர் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கும் நேரத்தில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 112* ரன்களை விளாசியுள்ளார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அதில் அடங்கும்.

விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தவித்தது இலங்கை கிரிக்கெட் அணி. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 229 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் இஷான் கிஷான் 1, சுப்மன் கில் 46, ராகுல் திரிபதி 46, சூர்யகுமார் யாதவ் 112*, ஹர்டிக் பாண்டிய 4, தீபக் ஹூடா 4, அக்சர் பட்டேல் 21 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இலங்கை அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here