இந்த இருவரின் பெயர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறாது ; சரியான அணியை தேர்வு செய்வாரா ராகுல் டிராவிட் ?

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிக்கான சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023:

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது என்று ஐசிசி உறுதியாக கூறியுள்ளனர்.

இந்திய அணியின் மோசமான நிலை :

கடந்த பல ஆண்டுகளாவே இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஐசிசி போட்டிகளுக்கும் ராசியே இல்லை. ஆமாம், பல ஆண்டுகளாகவே ஐசிசி தொடரில் வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

மற்ற அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வரும் இந்திய, தொடரில் வென்று வருகின்றனர். அது ஏன் ..! கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாய் கிரிக்கெட் அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தது, குறிப்பாக பவுலிங்.

அதனால் 2023ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்யவேண்டுமென்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான தகவலின் படி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 20 வீரர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில் : ” இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் 20 வீரர்களின் உத்தேச அணியின் விவரம் வெளியாகியுள்ளது. என்னை பொறுத்தவரை அதில் சுப்மன் கில் மற்றும் ஷர்டுல் தாகூர் இடம்பெறவே கூடாது. அதே சமையத்தில் பும்ரா, உம்ரன் மலிக் அர்ஷதீப் சிங், முகமத் சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் போதும். இதனை நான் ஒரு தேர்வாளராக இருந்தால் என்ன செய்வானோ, அதை சொல்கிறேன்.”

“ஒரு போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் யூசப் பதான் போன்ற ஒரு வீரர் அணியில் இருக்க வேண்டும். அனைத்து வீரர்களும் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனென்றால் இப்பொழுது இருக்கும் வீரர்களிடன் தொடர்ச்சியாக விளையாடுவதை எதிர்பார்க்கவே முடியாது. உதாரணத்திற்கு ரிஷாப் பண்ட், தொடர்ச்சியாக விளையாடுவதை விட, அவ்வப்போது மட்டுமே ரன்களை அடித்து வருகிறார்.”

“அதனால் போட்டியில் வெல்ல வேண்டும் என்பது தான் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.”

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? எந்த வீரர்கள் இடம்பெற்றால் இந்த முறை கோப்பையை இந்திய அணி வெல்ல முடியும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here