நல்லவேள இவரு இந்திய அணியின் விளையாடவில்லை ; தப்பித்துவிட்டார்….! முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து வருகின்ற 9ஆம் தேதி அன்று நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறிவிடும்.

இந்திய அணியின் தொடக்க வீரருக்கு ஏற்படும் சிக்கல் :

இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் நீண்ட காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில போட்டிகளில் கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தி வருகிறது.

தொடக்க ஆட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதில் கே.எல்.ராகுல் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து வருகிறார். அதனால் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. அதனால் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து கே.எல்.ராகுலை வெளியேற்றியுள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில் : ” உண்மையிலும் கே.எல்.ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான்.”

“நிச்சியமாக இண்டோர் மைதானத்தில் விளையாடி இருந்தால் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்திருப்பார். ஆமாம், அதற்கு முக்கியமான காரணம் பிட்ச் அப்படி…! பிறகு இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக வாய்ப்பை இழந்திருப்பார்.”

“இந்த பிட்ச் (இண்டோர் மைதானம்) -ல் பேட்டிங் செய்வது மிகவும் கடுமையான விஷயம். யாராலும் அவ்வளவு சுலபமாக ரன்களை அடிக்க முடியாது. விராட்கோலியாக இருந்தாலும் முடியாது. அதுமட்டுமின்றி இந்த பிட்ச்-ல் விக்கெட்டை கைப்பற்றுவது மிகவும் சுலபமான விஷயம்.”

“ஏன்….! நான் பவுலிங் செய்திருந்தால் கூட விக்கெட்டை கைப்பற்றிருப்பேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.”

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான நிலையில் விக்கெட்டை பறிகொடுத்த கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணி தேவையா ?