இவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்றினால் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது ; ரசிகர்கள் ஆவேசம் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் இந்த மாதம் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நிலை :

எப்பொழுதும் இது போன்ற போட்டிகளில் இந்திய அணியின் பங்களிப்பு தொடக்கத்தில் சிறப்பாக தான் இருக்கும். உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆனால் சூப்பர் 4 லீக் சுற்றில் மோசமான நிலையில் இருந்த இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போட்டிகளில் இருந்து வெளியேறியது. அதே நிலைமை தான் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் முதலில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி போட்டியில் வென்றனர். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் கவலைக்கிடமாக மாறியது.

ஆமாம், அதிலும் குறிப்பாக தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா எதிர்பார்க்கும் அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை. ரோஹித் சர்மா ஆவது நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அரைசதம் அடித்தார். ஆனால் கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு எந்த பயனும் இல்லை.

கே.எல்.ராகுலின் மோசமான நிலைமை :

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022ல் பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்களையும், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 9 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். எப்பொழுதும் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றிக்கு பாதைக்கு அணியை வழிநடத்த முடியும்.

ஆனால் கே.எல்.ராகுல் சரியாக பார்ட்னெர்ஷிப் கொடுக்காத காரணத்தால் தொடக்க ஆட்டம் இந்திய அணிக்கு எப்பொழுதும் அமையாமல் போய்விடுகிறது. அதனால் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷாப் பண்ட் இடம்பெற்றால் கூட சிறப்பாக அமைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றனர். கிரிக்கெட் ரசிகர்களும் அவரவர் கருத்துக்களை கே.எல்.ராகுலுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.