இந்த மூன்று காரணத்துக்காக ஜடேஜா கண்டிப்பாக டெஸ்ட் அணியில் இருக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் தான்.. அந்த காரணம் என்ன தெரியுமா ?

இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரர் மற்றும் ஆல் -ரவுண்டர்களில் ஒருவர் தான் ஜடேஜா. இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இந்திய அணிக்கு உள்ளது. அதனால் இவரை அணியில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினம் தான்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து அணி. அதில் ஜடேஜாவின் பவுலிங் தேவை இல்லை என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்தை கூறி வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டுக்கு இரண்டாவது ஸ்பின்னர் தேவை இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அனால் ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருக்க இந்த மூன்று காரணம் தான் முக்கியாக தெரிகிறது. அப்படி என்ன அந்த காரணங்கள் ?

பார்ட்னெர்ஷிப் பிரேக்கர் :

ஜடேஜா ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இவரது பவுலிங் திறன் அந்த அளவுக்கு இருக்கும். எதிர் அணியில் சில வீரர்கள் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அதிக அளவில் அடிப்பார்கள். ஆனால் அதனை ஜடேஜாவில் சூழல் பந்தால் அந்த பார்ட்னெர்ஷிப் பிரேக் செய்து, எதிர் அணியை திணற வைப்பார்.

ஆபத்தான பவுலர் :

ஜடேஜாவின் சூழல் பந்து வீச்சு எந்த நேரத்திலும், விக்கெட்டை எடுக்கும் திறன் உள்ளது. அதுவும் முக்கியமாக ரைட் – பேட்ஸ்மேனுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளார். அவர்கள் சொன்ன படி சுலபாக பல விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

பேட்டிங் :

இவரது பேட்டிங் திறனை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. ஏனென்றால் இவர் இறுதியில் அணியின் நிலையை உணர்ந்து அதற்கு தவுந்த மாதிரி ரன்களை அடித்து வருகிறார். ஏப்ரல் மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் இவரது பேட்டிங் மிகச்சிறந்த ஒன்றை இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் மட்டுமின்றி டெஸ்ட், ஒருநாள் போன்ற போட்டிகளிலும் இவரது பேட்டிங் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.