எனக்கு பிறகு இவர் தான் கேப்டனாக இருக்க முடியும் ; இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஆரம்பித்தது இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை. ஆமாம், தொடக்கத்தில் நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா டி-20 போட்டிக்கான கேப்டனாக விளையாடி வந்தார்.

ஆனால் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு செய்த அதிரடியான முடிவால் ஷார்ட் போர்மட் (ஒருநாள் மற்றும் டி-20) போட்டிகளில் தனித்தனி கேப்டன் இருந்தால் நன்றாக இருக்காது என்று விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றிய பிசிசிஐ, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ.

பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டுமே விராட்கோலி விளையாடி வந்தார். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆமாம், கடந்த மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

அதனால் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. இதனை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தீடிரென்று நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று அவரே அறிவித்தார். அது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

இன்று இரவு இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிடம் அடுத்த கேப்டன் மற்றும் லீடர் பற்றிய பேச்சு தொடங்கியது. அதில் ” நான் எப்பொழுதும் யாரிடமும் இதை செய் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால் அது அவர்களுக்கு நன்கு தெரியும்.

நான் இந்திய அணியில் இருப்பதற்கு காரணம் அவர்களை வழிநடத்துவது தான். அதனை செய்ய நான் மிகவும் சந்தோசமாக தான் நினைக்கிறன். அதுமட்டுமின்றி இந்திய அணி வீரர்களான பும்ரா, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய மூன்று வீரர்களும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளனர்.

அதனால் இவர்கள் லீடராக (கேப்டனாக) கூட இருக்க முடியும். அவர்களுக்கு நன்கு தெரியும் என்ன பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்று, அதனால் எந்த விதமான அழுத்தத்தையும் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டாம். நாங்கள் எப்பொழுது ஒரு பிளான் செய்வோம், அதனை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யாராக இருக்க முடியும் ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!