சச்சினனுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா ? என்ன நடக்குது இங்க ?? முன்னாள் வீரர் ஆவேசம் ;

0

கிரிக்கெட் போட்டி என்றால் அதில் இந்திய அணிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. முதலில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தான் உலகக்கோப்பையை வென்றது. அவரை தொடர்ந்து சௌரவ் கங்குலி இந்திய அணியை வழிநடத்தினார். பின்னர் தோனி மற்றும் இப்பொழுது ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

தோனி தலைமையிலான இந்திய அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார், வ்ருத்தமன் சஹா அறிமுகம் ஆனார். ஆனால் இதுவரை பெரிய அளவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வந்தனர். இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில், 9 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் ஐபிஎல் போன்ற 111 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

37 வயதான சஹாவுக்கு இப்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருக்கிறார். இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் கிர்மணி அளித்த பேட்டியில் சில முக்கியமான தகவல் பகிர்ந்துள்ளார். அதில் ” நான் நிச்சியமாக இந்த பையனுக்கு அதிக மதிப்பு கொடுப்பேன்.

என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் இவர் மட்டும் தான். ஆனால் அணியை தேர்வு செய்யும் தேர்வு குழு இதனை எல்லாம் கவனிப்பதே இல்லை, அவரகள் என்ன யோசிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. அதுமட்டுமின்றி இந்திய அணியில் பல ஆண்டுகளாக இருந்துவரும் ஒரு விஷயம் வயது பற்றிய பேச்சு தான்.

சச்சின் டெண்டுல்கரும் தான் அவரது 30 வயதில் விளையாடி வந்தார். ஆனால் சஹா இந்திய அணியில் இருக்கும்போது அவரது முழு திறமையும் வெளிப்படுத்தி விளையாடி வந்த நேரத்தில் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.

அதனை எல்லாம் யோசிக்கவே கூடாது. அதனால் இனிவரும் ரஞ்சி கோப்பை போட்டியில் அருமையாக விளையாடிய இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வழியை மட்டும் பார்க்க வேண்டும். அவரால் (சஹா) இன்னும் எவ்வளவு போட்டிகளில் விளையாட முடியுமோ அந்த அளவிற்கு விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் சையத் கிர்மணி.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி இப்பொழுதெல்லாம் சிறப்பாக விளையாடி வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை முன்னேறியது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதில் ரஹானே மற்றும் புஜாரா போன்ற இரு பேட்ஸ்மேன்களின் நிலைமையும் கேள்வி குறியாகியுள்ளது.

ஆமாம், பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில் ; ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் முதலில் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட சொல்லுங்கள், பின்னர் இந்திய அணியில் விளையாடலாம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் கங்குலி. இதற்கிடையில் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான் ? என்ன செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here