இந்திய அணிக்கு மிகப்பெரிய தூண்களாக களமிறங்கிய மூன்று வீரர்கள் இவர்கள் தான் ; இந்திய அணி இவர்களை கவனிக்க வேண்டும் ; முன்னாள் இந்திய வீரர் திட்டவட்டம் ;

ஒரு வழியாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது அடுத்த தொடர் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆமாம்… வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் வழக்கம்போல எதிர்பார்த்த வீரர்களும் , எதிர்பாராத வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இவர்கள் மூன்று வீரர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர். போட்டிகளை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் ; நிச்சியமாக இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் மற்றும் பிரஷித் கிருஷ்ணா போன்ற மூவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

இவர்கள் மூன்று வீரர்களுக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்கள். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் இந்திய அணிக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய அளவில் அழுத்தம் ஏற்பட்டது.

அப்பொழுது இவர்களை விளையாட வைத்தால் இவர்களால் சரியாக அவர்களுது விளையாட்டை வெளிப்படுத்த முடியாது. அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக இவர்கள் அனைவர்க்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இவர்களை பெஞ்ச்-ல் உட்காரவைப்பது சரியாக இருக்காது.

அதனால் நிச்சியமாக இவர்கள் மூவரும் இந்திய அணியின் முக்கியமான வீரர்களாக வலம் வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்று குறியுள்ளார் கவாஸ்கர். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் அடித்தார்.

அதேபோல பிரஷித் கிருஷ்ணா பவுலிங் செய்து 59 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றினார். தீபக் சஹார் முக்கியமான முதல் இரு விக்கெட்டை கைப்பற்றியது மட்டுமின்றி, பேட்டிங் செய்து 34 பந்தில் 54 ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார். இதில் தீபக் சஹார் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, பிரஷித் கிருஷ்ணா ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.