அடுத்த போட்டியிலும் இவர்களுக்கு வாய்ப்பு சத்தியமா கிடையாது…! சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் அதிரடி தகவல்..!!

அடுத்த போட்டியிலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடையாது…! சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் அதிரடி தகவல்..!!

ஐபிஎல் 2021 : இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் 2021 தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் 2021 ரசிகர்கள் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. அதுமட்டுமின்றி 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை (2021) மகேந்திர சிங் தோனி தான் அணியை வழிநடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான துவக்க ஆட்டம் அமையவில்லை.

இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்தனர் சிஎஸ்கே வீரர்கள். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான தவான் மற்றும் ப்ரித்வி ஷா 11 ஓவர் ஆட்டம் இலக்கம் விளையாடினார்.

18.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. சென்னை அணியின் தோல்விக்கு பவுலிங் தான் சரியாக இல்லை என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங் அதிரடியாக விளையாடும் ஒரு மைதானம்.

அப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி என் அணியில் லுங்கி நிகிடி மற்றும் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் வீரர்கள் ஏன் அணியில் இடம் பெறவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அடுத்த போட்டியிலும் அவர்கள் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் இன்னும் லுங்கி நிகிடிக்கு தனிப்படுத்தும் காலம் முடியவில்லை. அதுமட்டுமின்றி இப்பொழுது தான் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

அதனால் நிச்சியமாக அவர் அணியில் இணைய இன்னும் காலதாமதம் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். அப்படியே இவர்கள் இருவரும் அணியில் இடம் பெற்றால் யாருக்கு பதிலாக இந்த இருவருக்கு இடம் கிடைக்கும் என்று பல சந்தேகம் எழுகிறது. அதனால் இனிவரும் போட்டிகளில் அதனை தோனி எவ்வாறு கையாளப்போகிறார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.