இவங்க இருவர் மட்டும் இல்லையென்றால் இங்கிலாந்து அணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கும் : ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய வழக்கம் போலவே பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை என்றாலும் ஒருவர் பின் ஒருவராக முடிந்த வரை ரன்களை அடிக்க அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்தனர். அதனால் இங்கிலாந்து அணி இறுதி வரை போராடி 246 ரன்களை குவித்தனர்.

அதில் அதிகபட்சமாக மொயின் அலி மற்றும் வில்லே போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் இங்கிலாந்து அணி 49ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 246 ரன்களை அடித்தனர். அதில் ராய் 23, பரிஸ்டோவ் 38, ஜோ ரூட் 11, பட்லர் 4, மொயின் அலி 47, வில்லே 41 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. சுலபமாக அடித்துவிடும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் இந்திய அணியில் பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறியது. தொடர்ந்து விக்கெட்டை இழந்த இந்திய அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது.

38.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இந்திய 146 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டை இழந்தும் ரன்களை அடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது 1 – 1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர். அதனால் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்களோ..! அவர்கள் தான் தொடரை கைப்பற்ற போகின்றனர். தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ? போட்டி முடிந்த பிறகு வெற்றியை குறித்து பேசிய ஜோஸ் பட்லர் ;

“நாங்க சிறப்பாக விளையாடவில்லை, இருப்பினும் இந்த ரன்கள் அடிக்க சவாலாக தான் இருந்தது. குறிப்பாக எங்க டீம் வீரர்கள் பவுலிங் மிகவும் அற்புதமாக வீசினார்கள். அதிலும் மொயின் அலி மற்றும் வில்லே போன்ற வீரர்கள் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து 80க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர்.”

“அவர்கள் பேட்டிங் செய்ய தொடங்கிய போது விக்கெட்டை கைப்பற்றி அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம். எங்கள் அணியின் வீரர் டொப்லெ சிறப்பாக பவுலிங் செய்தார், 24 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியது.”

“கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர், அதனால் அந்த பெயரை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இப்பொழுது 1 – 1 என்ற நிலையில் இருக்கிறோம், அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிகளை எடுப்போம் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here