இவங்க மட்டும் இல்லையென்றால் இந்திய அணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கும் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகள் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

ஆமாம், நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷான் 3 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

அதனால், இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அதனை சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் சரி செய்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆமாம், அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்தனர்.

அதில் சஞ்சு சாம்சன் 77, தீபக் ஹூடா 104 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து அணி. இறுதி வரை போராடிய அயர்லாந்து அணி 221 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றுள்ளது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ; “நான் எப்பொழுது அணியில் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்ற வேண்டும் என்பதை பற்றி தான் நான் யோசிப்பேன். போட்டியில் என்ன நடக்கிறதோ, அதற்கு தான் விளையாட நினைப்பேன்.”

“அதனால் தான் இறுதி ஓவரில் உம்ரன் மாலிக்-க்கு ஆதரவாக நான் இருந்தேன். எங்களுக்கு தெரியும் நிச்சியமாக இறுதி ஓவரில் 18 ரன்களை அடிப்பது சுலபம் இல்லையென்று. அயர்லாந்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக தான் விளையாடினார்கள், அதேபோல அவர்களை ரன்களை அடிக்க விடாமல் தடுத்த இந்திய பவுலர்களுக்கும் பாராட்டுகள் சேரும்.”

“மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு பிடித்த வீரர்கள் என்றால் அது தினேஷ் கார்த்திக் மற்றும் சஞ்சு சாம்சன் தான். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவது அனைவருடைய கனவாக உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் அணியை வழிநடத்தி தொடரை கைப்பற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.”

“இந்த தொடர் போட்டியில் தீபக் ஹூடா மற்றும் உம்ரன் மாலிக் ஆகிய இருவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது தான் உண்மை என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”