நேற்று டுப்லின் நடந்த இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணியும், ஆண்ட்ரே பால்பிரண்யே தலைமையிலான அயர்லாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய போவதாக ஹர்டிக் பாண்டிய முடிவு செய்தார்.


அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. தொடக்க வீரரான இஷான் கிஷான் பெரிய அளவில் ஆட்டம் விளையாடவில்லை. இருப்பினும் சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்துள்ளனர். அதில் சஞ்சு சாம்சன் 77, இஷான் கிஷான் 3, தீபக் ஹூடா 104, சூரியகுமார் யாதவ் 15, ஹர்டிக் பாண்டிய 13, புவனேஸ்வர் குமார் 1 ரன்களை அடித்தனர்.


பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து. இந்திய கிரிக்கெட் வீரர்களை போலவே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிலும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், உம்ரன் மாலிக் போன்ற பவுலர்களை கலங்க வைத்தனர்.
ஆமாம், இறுதி வரை போராடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 221 ரன்களை அடித்தனர். அதனால் 4 ரன்கள் வ்வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. அதில் ஸ்டிர்லிங் 40, ஆண்ட்ரே பால்பிரண்யே 60, ஹார்ரி டெக்டர் 39, டாக்ரெல் 34, மார்க் அடைர் 23 ரன்களை அடித்துள்ளனர்.
வீடியோ ;
Watch from 1.05 – The fanbase for a player who has just played 14 International games. pic.twitter.com/mCFBgI7WnR
— Johns. (@CricCrazyJohns) June 28, 2022
போட்டி ஆரம்பிக்கும் முன்பு ஹர்டிக் பாண்டிய டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தார். பின்பு டாஸ் வென்ற ஹார்டிக் பாண்டிய பேட்டிங் செய்ய போவதாக கூறிவிட்டு, அணியில் நடந்த மாற்றங்களை பற்றி கூறினார். அப்பொழுது சஞ்சு சாம்சன் பெயர் பற்றி கூறியவுடன் ரசிகர்கள் என்ன செய்தார் என்பதை வீடியோவில் காணவும்.