இவரை போன்ற வீரர்கள் தான் இனிமேல் இந்திய அணிக்கு தேவை ; வெற்றிக்கு முக்கியமான காரணம் இவர்தான் ; ரோஹித் சர்மா ஓபன் டாக்

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளனர்.

மூன்றாவது போட்டியின் விவரம் :

நேற்று மதியம் 1:30 மணியளவில் இண்டோர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் சிறப்பாக விளையாடிய ரன்களை அடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 385 ரன்களை விளாசினார்கள்.

அதில் ரோஹித் சர்மா 101, சுப்மன் கில் 112, விராட்கோலி 36, இஷான் கிஷான் 17, சூர்யகுமார் யாதவ் 14, ஹர்டிக் பாண்டிய 54, ஷர்டுல் தாகூர் 25 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.

தொடக்க வீரரான பின் ஆலன் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் டேவன் கான்வே அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார். ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 295 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 138, ஹென்றி நிக்கோலஸ் 42, மைக்கல் ப்ரஸ்வெல் 26. மிட்சேல் சண்டனர் 34 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிக்கான தொடரில் நியூஸிலாந்து அணியை வாஷ்-அவுட் செய்தது இந்திய.

ரோஹித் சர்மா பேட்டி :

“எனக்கு தெரிந்து இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளோம். இதுதான் சரியான வழியாக இருக்கும். அதுமட்டுமின்றி, நாங்கள் அனைவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறோம். எங்களுக்கு நன்கு தெரிந்து வாய்ப்பு கிடைக்காமல் முக்கியமான வீரர்கள் பெஞ்ச்-ல் இருக்கின்றனர்.”

“அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்றதால் ஷமி மற்றும் சிராஜ்-க்கு பதிலாக சஹால் மற்றும் உம்ரன் மலிக் -க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இளம் வீரரான சுப்மன் கில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் கில். இது போன்ற இளம் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து அவர்களுது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.”

“அதுமட்டுமின்றி, இன்று நான் அடித்த சதம் எனக்கு மிகப்பெரிய விஷயம் தான். நாங்கள் ranking பற்றி ஒருபோதும் யோசித்ததே கிடையாது. எப்பொழுதும் பீல்டிங் செய்து கொண்டு இருக்கும்போது சரியாக விளையாட வேண்டும் என்பது தான் முக்கியம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here