ஆசிய கோப்பை 2023 :
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தான் முக்கியமான போட்டி நடைபெற இருக்கிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் :
இன்று மதியம் 3 மணியளவில் குரூப் ஏ -ல் இடம்பெற்றுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். இதுவரை 132 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது இந்திய மற்றும் பாகிஸ்தான். அதில் அதிகபட்சமாக 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் 55 போட்டிகளில் இந்திய அணியும் வென்றுள்ளனர். அதனால் இன்றைய போட்டி நிச்சயமாக சவாலாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் மோசமான நிலைமை :
மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் அசத்தலாக விளையாடி ரன்களை அடித்து போட்டியில் வென்றுள்ளது இந்திய. ஆனால் பல அணிகள் விளையாடும் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இந்த முறையாவது ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்திய அணியின் உத்தேச அணியின் விவரம் :
இன்று மதியம் பங்களிக்கும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ஷர்டுல் தாகூர் அல்லது முகமத் ஷமி, குல்தீப் யாதவ், முகமத் சிராஜ் மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
ரசிகர்களுக்கான கேள்வி :
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த எந்த வீரர் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற வேண்டும் ? எந்த வீரர்கள் இடம்பெற்றால் வெற்றியை கைப்பற்ற முடியும் என்று உங்களுடைய கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!