டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11 இதுதான் ; இந்திய அணியை சமாளிக்குமா இலங்கை அணி ?

நாளை காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது முதல் டெஸ்ட் போட்டிகள். அதில் இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கை அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தான் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் இலங்கை அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய. அதனால் தொடரை கைப்பற்றிய சந்தோசத்துடன் களமிறங்க போகிறது இந்திய அணி. இருப்பினும் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11 யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்: ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் நிச்சயமாக தொடக்க ஆட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டர் : சுமன் கில், விராட்கோலி, ஹனுமா விஹாரி அல்லது ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் விஹாரிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெற்றால் மிகவும் சிறப்பான மிடில் ஆர்டர் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆல் -ரவுண்டர் : இந்திய அணியின் ஆல் ரவுண்டர் என்றாலே அது ரவீந்திர ஜடேஜா மட்டுமே தான். ஆமாம், கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கியமான ஆல் -ரவுண்டராக களமிறங்கி விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இறுதி நேரங்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார் ஜடேஜா.

பவுலர் : ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி போன்ற நான்கு வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர். இதில் குல்தீப் யாதவ் அவ்வப்போது சரியாக போட்டிகளில் விளையாடுவதில்லை. அதனால் பெரிய அளவில் அவரது பங்களிப்பு இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால் இடம்பெற்று வருகிறார்.

இந்த 11 பேர் தான் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட போவதாக தெரிகிறது. அதனால் நிச்சியமாக இலங்கை அணிக்கு சவாலாக தான் இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ஆவது இலங்கை அணியை வென்று கோப்பையை கைப்பற்றுமா ?

உங்களுக்கு பிடிச்ச சரியான ப்ளேயிங் 11 யார் யார் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!