அவங்க அதை செய்தாங்க..! அதனால் நாங்களும் அதையே அவர்களுக்கு திருப்பி செய்தோம் ; ஷர்டுல் தாகூர் பேட்டி

0

நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இரண்டாவது ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனால் முதலில் வேறு வழியில்லாமல் பேட்டிங் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

அதில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். ஆமாம்..! பின்னர் களமிறங்கிய விராட்கோலி-யும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இந்திய அணியின் ரன்களை முன்னேற்றி கொண்டு சென்றனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த இந்திய அணி 237 ரன்களை அடிக்க முடிந்தது. ஆமாம்..! அதில் ரோஹித் சர்மா 5, ரிஷாப் பண்ட் 18, விராட்கோலி 18, கே.எல்.ராகுல் 49, சூர்யகுமார் யாதவ் 64, வாஷிங்டன் சுந்தர் 24, தீபக் ஹூடா 29, ஷர்டுல் தாகூர் 8, முகமது சிராஜ் 3, யுஸ்வேந்திர சஹால் 11 மற்றும் பிரஷித் கிருஷ்ணா 0 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் தோல்வியே மிஞ்சியது, ஆமாம் ..! 46 ஓவர் வரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து வெறும் 193 ரன்களை மட்டுமே கைப்பற்றியது.

அதிலும், அதிகபட்சமாக ஷாமர் ப்ரூக்ஸ் 44, ஹோப் 27, ஹொசேயின் 34 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அணி. 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருப்பதால் தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்டுல் தாகூர் அளித்த பேட்டியில் ; சத்தியமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஸ்மித் இப்படி பேட்டிங் செய்வார் என்று நினைக்கவில்லை. முதலில் 3 ஷாட்ஸ் சிறப்பாக விளையாடினார், ஆனால் அதனை தொடர்ந்து போட்டி எங்கள் (இந்திய) அணிக்கு சாதகமாக மாறியது.

எனக்கு தெரிந்து இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தியுள்ளோம். அதுமட்டுமின்றி எங்களது ஒரே நோக்கம் விக்கெட்டை கைப்பற்றுவது தான். அதுவும் முதலில் பேட்டிங் செய்யும் வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றும்போது போட்டி நம் கையில் தான் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ஷார்ட் பந்துகளை தான் வீசினார்கள். அதனால் தான் நாங்களும் அதனையே அவர்களுக்கு திருப்பி செய்ய முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார் ஷர்டுல் தாகூர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷர்டுல் தாகூர் 8 ரன்களையும், 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here