சென்னை அணியின் ப்ளேயிங் 11 இதுதானா ..! கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியானது ; முழு விவரம் இதோ ;

நாளை இரவு முதல் தொடங்க உள்ளது ஐபிஎல் 2022 திருவிழா. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தொடங்கியது ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு. ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் புதிதாக (லக்னோ மற்றும் குஜராத்) போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் மெகா ஏலத்தையும் நடத்த முடிவு செய்து அதனை சிறப்பாகவும் நடத்தி முடித்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி முதல் போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளதால் இன்னும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், இதுவரை சென்னை அணியை வழிநடத்தி வந்த சென்னை அணியின் கேப்டனாக இருந்து தோனி விலகினார்.

இப்பொழுது மற்றுமின்றி இனிவரும் போட்டிகளில் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த போகிறது ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தான். இருப்பினும் நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் யார் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்விகள் இப்பொழுது எழுந்து வருகின்றனர்.

மெகா ஏலம் நடந்த பிறகு நடக்க போகும் முதல் போட்டியில் என்றதால் ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்வது சற்று கடினமான வேலை தான். ஆனால் அதில் சென்னை அணியை சுலபமாக கணித்துவிடலாம். ஏனென்றால் கடந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடிய அம்பதி ராயுடு, உத்தப்பா , ப்ராவோ போன்ற வீரர்களை மீண்டும் சென்னை அணியே கைப்பற்றியுள்ளது.

நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். சென்னை அணியின் உத்தேச அணியின் விவரம் இதோ ;

ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் ; ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் கான்வே போன்ற இருவரும் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் எந்த அளவிற்கு பேட்டிங் செய்வார் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் காண்வே எப்படி விளையாட போகிறார் ? சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்வாரா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மிடில் ஆர்டர் : ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, தோனி போன்ற வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று நன்கு தெரியும். இந்த மூவரில் ஒருவர் ஆட்டம் இழந்தாலும் மற்றொரு வீரர் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

ஆல் – ரவுண்டர் : ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் ப்ராவோ போன்ற வீரர்கள் ஆல் – ரவுண்டராக களமிறங்க உள்ளனர். இதில் ரவீந்திர ஜடேஜா, ப்ராவோ போன்ற வீரர்களின் பேட்டிங் மற்றும் பவுலிங் பற்றி குறை சொல்லவே முடியாது. ஆனால் சென்னை அணியில் இணைந்துள்ள ஷிவம் துபே-வின் ஆட்டம் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

பவுலர்கள் :ஆடம் மில்னே, தேஷ்பாண்டே அல்லது ஆசிப் மற்றும் மிச்சேல் சண்ட்னர் போன்ற மூன்று பவுலர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த முறை தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் முதல் பாதி ஐபிஎல் 2022 போட்டிகளில் களமிறங்க மாட்டார் என்று உறுதியான தகவல் வெளியானது.

அதனால் இந்த முறை பவுலிங் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..! இந்த ப்ளேயிங் 11 ஐ பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!