இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களாக ஏற்று கொள்ள முடியாது ; ஜெர்சியில் நடந்த மிகப்பெரிய மாற்றம் ; இது சரியா ?

0

இந்திய கிரிக்கெட் அணி :

மற்ற அணிகளை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணியில் பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி மற்ற நாடுகளை காட்டிலும் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக மாறியுள்ளது இந்திய. ஆமாம், கிரிக்கெட் போட்டி என்றாலே சுவாரஷியமாக பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் :

கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

அதனை அடுத்து இன்று இரவு முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. இதனை அடுத்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் அதற்கான பட்டியலை அறிவித்துள்ளது ஐசிசி. அதனால் பல நாடுகள் அவரவர் அணிகளுக்கு ஏற்ப புதிய ஆடையை அறிவித்து வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் புதிய ஸ்பான்ஸரான ட்ரீம் 11 புதிய ஆடையை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆடையில் இந்திய என்பதை காட்டிலும் ட்ரீம் 11 என்பதை தான் பெரியதாக பதிவு செய்துள்ளனர். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை பற்றி உங்களுடைய கருத்து என்ன ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here