ஏன் இவருக்கு மட்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே இல்லை ? இவருடைய சாதனைகளை பாருங்க ..!

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை வென்றுள்ளது இந்திய. அதனை அடுத்து இன்று இரவு முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்திய அணியில் வாய்ப்பு சரியாக வழங்கப்படுகிறதா ? இல்லையா ?

ஐபிஎல் டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிரடி காட்டும் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. இருப்பினும் அனைத்து வீரர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.

ஆமாம், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கிடைக்கும். திறமையான பல வீரர்களுக்கு இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

ஆமாம், தோனி கேப்டனாக விளையாடிய நேரத்தில் குல்தீப், யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்தது. ஆனால் இப்பொழுது ? அதுமட்டுமின்றி, இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வீரர் தான் புவனேஸ்வர் குமார் (வேகப்பந்து வீச்சாளர்).

கடந்த ஒரு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியிலும், 7 மாதங்களாக டி-20 போட்டிக்கான தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் புவனேஸ்வர் குமார்.

கடந்த ஆண்டு 2022ல் புவனேஸ்வர் செய்த சாதனைகள் :

  1. தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி சீரியஸ் படத்தை வென்றுள்ளார். (8 விக்கெட், 6.12 எகானமி)
  2. ஆசியா கோப்பை 2022ல் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர் விருது (11 விக்கெட்)
  3. 2022ல் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் அதிக டாட் பந்து வீசிய வீரர் புவி (53 டாட் பந்து)
  4. இந்திய அணியின் இதுவரை விளையாடிய போட்டிகளில் பவர் ப்ளேவில் அதிக டாட் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் (598 பந்துகள்)

இந்த சாதனைகள் அனைத்தும் கடந்த ஆண்டு செய்தவை மட்டுமே. இப்படி சிறப்பாக விளையாடி வரும் வீரருக்கு ஏன் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது இல்லை ? உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஸ்வர் குமாரின் பங்களிப்பு தேவையா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here