சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தக்கவைத்ததற்கு காரணமே இதுதான் ; ஆன… மாஸ் பண்ணிட்டே இருக்காரு ப.. !!!

கிரிக்கெட் ரசிகர்களே ..!!! தயாராகி இருங்க… இன்னும் இரு மாதங்கள் தான் இருக்கிறது ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம்…!! என்ன ஏலமா ?? ஏன் பிசிசிஐ திடிரென்று மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளனர்…?

ஏனென்றால் இரு புதிய அணிகள் (லக்னோ மற்றும் அகமதாபாத்) அறிமுகம் ஆகியுள்ளது. அதனால் மிதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும், மிதமுள்ள அனைத்து வீரர்களும் ஏலத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பிசிசிஐ கூறியது. சமீபத்தில் தான் தக்கவைத்துள்ளது வீரர் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதுமட்டுமின்றி இப்பொழுது ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்களில் புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்கள், அதில் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் தான் கைப்பற்ற வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் அவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

ஐபிஎல் டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணி தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை, நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐபிஎல் 2020 மிகவும் மோசமான ஆண்டாக தான் சிஎஸ்கே அணிக்கு நடந்துள்ளது. ஏனென்றால் ப்ளே ஆஃப் சுற்று என்றால் அதில் சென்னை இடம்பெறும்.

ஆனால் ஐபிஎல் 2020யில் லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த ஆண்டு தான் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் சிஎஸ்கே அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அதிலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்களை கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

பின்னர் இருந்தாலும் தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மேல் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை. ஐபிஎல் 2020 இறுதி நேரத்தில் தொடர்ந்து மூன்று அரை சதம் அடித்துள்ளார் ருதுராஜ். அதனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் போட்டிகளில் இடம்பெற்றார் ருதுராஜ். பின்னர் ஐபிஎல் 2021 கொஞ்சம் கூட யாருமே எதிர்பார்க்காத வகையில் 16 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 635 ரன்களை அடித்து அதிக ரன்களை அடித்த முதல் வீரர் என்று விருதையும் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒரு சதம் அடித்துள்ளார். இப்பொழுது விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய ருதுராஜ் தொடர்ந்து மூன்று சதம் அடித்துள்ளார். இந்திய அணியில் இடம்பெற அவரது வாய்ப்பை உறுதி செய்தே போகிறார் என்பது தான் உண்மை. ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஐபிஎல் 2021 யில் ஆடிய ஆட்டம் கொஞ்சமா ?? என்ன அடி… !! ஏன்னா பேட்டிங்கு ..! அவரது அதிரடியான ஆட்டத்தால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றது சரியான முடிவா ???