டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இதுவாக தான் இருக்கும் ; அப்போ மாஸ் தான் ;உத்தேச அணியின் விவரம் இதோ ;

ஐசிசி டி-20: வருகின்ற அக்டோபர் மாதத்தில் 17ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. அதனால் அனைத்து சர்வதேச கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகிறது. அதுமட்டுமன்றி, இந்திய கிரிக்கெட் அணியில் பல டி-20 வீரர்கள் உள்ளனர். அதில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் உள்ளது பிசிசிஐ .

அதுமட்டுமின்றி, டி-20 உலகக்கோப்பை போட்டி இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ. அதன் தொடக்கம் வருகின்ற 19ஆம் தேதி என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதனால் டி-20 ஐபிஎல் போட்டிகள் முடிந்த உடன் ஐசிசி டி-20 போட்டிகள் ஆரம்பித்தால் நிச்சியமாக ஐபிஎல் வீரர்களுக்கு நல்ல ஒரு அனுபவம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, சமீபத்தில் இந்திய அணி இதுவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். அணியின் விவரம் இதோ ;

ஓப்பனிங் ஆர்டர் :

ரோஹித் சர்மா , கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. ஏனென்றால் ரோஹித் ஷர்மாவுக்கு அதிக அனுபவம் உள்ளது, அதனால் போட்டிகளை சுலபமாக எதிர்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2021 போட்டியில் கே.எல். ராகுல் இதுவரை அதிரடியாக விளையாடிய அதிக ரங்களையும் அடித்துள்ளார். அதனால இவர்கள் இருவரும் ஓப்பனிங் செய்தால் சிறப்பாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

மிடில் ஆர்டர்:

விராட்கோலி ,சூரியகுமார் உதவ, ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ,ஹார்டிக் பாண்டிய ஆகிய மூவரும் இடம்பெறலாம். ஏனென்றால் இதில் விராட்கோலி கேப்டனாகவும், சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் அறிமுகம் ஆன முதல் போட்டியில் மட்டுமின்றி தொடர்ந்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சிறப்பான முறையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்தி மற்றும் ரன்களை அடித்து பல போட்டிகளில் வெற்றியை கைப்பற்றி கொடுத்துள்ளார் கேப்டன் ரிஷாப் பண்ட். அதனால் இப்பொழுது டெல்லி அணி ஐபிஎல் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

நம்ம ஹார்டிக் பாண்டிய கடந்து ஆண்டு போல இப்பொழுதெல்லாம் அவரால் சரியாக ரன்களையும், விக்கெட்களையும் எடுக்க முடியவில்லை. ஆனாலும் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் ஹார்டிக் பாண்டிய அவருடைய பழைய விளையாட்டை விளையாட ஆரம்பித்துவிட்டதாக தான் தெரிகிறது. அவருடைய வாய்ப்பு மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வைத்து தெரியவரும்.

ஆல் -ரவுண்டர்கள் :

ரவீந்திர ஜடேஜா, ஷர்டுல் தாகூர், தீபக் சாகர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. இதில் ஜடேஜாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் டி-20 போட்டிகளில் எப்படியெல்லாம் விளையாடுவார் என்று அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் நடந்த போட்டிகளில் வைத்து ஷர்டுல் தாகூர் மற்றும் தீபக் சாகர் ஆகிய இருவரின் ஆட்டம் அனைவரையும் ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இவர்கள் இருவரும் பவுலர்கள் ஆனால் , இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாகர் அடித்த ரன்களால் தான் இந்திய அணி வெற்றிபெற்றது.

பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சரி சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷர்டுல் தாகூர் பேட்ஸ்மேன் ஆக மாறி ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதனால் இவர்கள் மூவரும் அணியில் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது.

பவுலர்கள்:

யுஸ்வென்ற சஹால் , ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், ரவிச்சந்திர அஸ்வின், வருன் சக்ரவத்தி போன்ற வீரர்கள் சிலருக்கு நிச்சியமாக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.