சிஎஸ்கே அணியில் இவர்கள் இரண்டு பேர் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் … !! உறுதியானது சிஎஸ்கே அணி…!!

ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அன்று சிறப்பான முறையில் பல பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஆரம்பித்தது ஐபிஎல் 2021 போட்டிகள். ஆனால் எதிர்பாராத விதமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதனால் ஐபிஎல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஐபிஎல் 2021 ஏன் தற்காலிகமாக நிறுத்தினர் ?

ஐபிஎல் 2021 இந்தியாவில் தான் ஆரம்பித்தது. ஆனால் அதில் சில வீரர்களுக்கு காரொனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதனால் வேறு வழியில்லாமல் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினார். அதுமட்டுமின்றி, அனைத்து வீரர்களுக்கும் வைரஸ் இருக்கிறதா இல்லையா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீட்டுக்கு அனுப்பியது பிசிசிஐ.

எப்பொழுது ஐபிஎல் 2021 தொடங்கும் ?

இந்த கேள்விதான் ரொம்ப நாட்களாக ஐபிஎல் ரசிகர்கள் இடம் எழுப்பப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது மீதமுள்ள போட்டிகள். அதனால் விறுவிறுப்பான நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது என்பது தான் உண்மை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட போகும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் யார் ??

இதுவரை ஐபிஎல் 2021யில் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வென்று 10 புள்ளிகளுடன் , புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபலஸிஸ் தான் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

ஏனென்றால், கடந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆனவர் ருதுராஜ், முதலில் சில ஆட்டங்கள் சோதப்பினாலும் இப்பொழுது சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக மாறியுள்ளார் என்பது தான் உண்மை. அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் சில அரைசதம் அடித்துள்ளார்.

ஒருவேளை டுபலஸிஸ் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் நிச்சியமாக ராபின் உத்தப்ப தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாட அதிகம் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றார் ராபின் உத்தப்ப. ஆனால் இதுவரை அவர் இன்னும் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சரி பார்க்கலாம் தோனி என்ன செய்யப்போகிறார் என்று..!