இந்திய இல்லை ; இந்த இரு அணிகளுக்கு இடையே தான் உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெறும் ; கிறிஸ் கெய்ல் பேட்டி ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது..!

இந்திய அணியின் முன்னேற்றம் :

கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி மீண்டும் போர்ம்-க்கு திரும்பிவிட்டார். அதனால் இந்திய அணிக்கு பாசிட்டிவ் ஆன விஷயம் தான்.

ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி :

கேப்டன் – ரோஹித் சர்மா, துணை கேப்டன் – கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதனை தவிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர், முகமத் ஷமி, ரவி பிஷானி மற்றும் தீபக் சாஹர் போன்ற வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை 2022 போட்டியில் யார் வெல்ல போகிறார்கள் ?

நிச்சியமாக இந்த கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கும். இதனை பற்றி பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “எனக்கு தெரிந்து இந்த ஆண்டு உலகக்கோப்பை 2022ல் நிச்சியமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும்.”

“இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு புதிய கேப்டனுடன் விளையாட போகிறது. அதுவும் பொல்லார்ட், ரசல் மற்றும் ப்ராவோ போன்ற வீரர்களும் அணியில் இல்லை. அதனால் கடினமாக தான் இருக்கும். அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கும் வீரர்கள் திறமையான வீரர்கள் தான். அதுமட்டுமின்றி மற்ற அணிகளுக்கு ஆபத்தான அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கும்.” என்று கூறியுள்ளார் கிறிஸ் கெய்ல்.

கிறிஸ் கெய்ல் சொன்னது போல வெஸ்ட் இண்டீஸ் அணி தான் உலகக்கோப்பை போட்டியை வெல்லுமா ? அல்லது இந்த ஆண்டு ஐசிசி டி-20 போட்டிக்கான கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? அதற்கு என்ன காரணம் ?