இவங்க இரண்டு பேர் போதும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற… இந்த முறை கோப்பை வெல்ல போவது இந்திய அணி தான் ; சச்சின் டெண்டுல்கர் பேட்டி ; யார் அந்த இருவர் ?

0

வான்கடே மைதானத்தில் இறுதியாக ஒரு சிக்ஸர் அடித்த தோனி, இந்திய அணி உலகக்கோப்பை 2011ஆம் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். அதனை அடுத்து 2013 ஆம் சாம்பியன் கோப்பை வென்றது. அதனை தொடர்ந்து இந்திய அணி எந்தவிதமான கோப்பையும் வெல்லவில்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ;வருகின்ற ஏப்ரல் 2022 வந்தால், 11 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆமாம்..! இது மிகப்பெரிய இடைவெளி தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஒருநாள், டி-20 அல்லது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் உலகக்கோப்பை வெல்வது தான் முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார் சச்சின். மேலும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் -ஐ பற்றி பேசிய சச்சின் டெண்டுல்கர்;

ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் சிறந்த ஜோடிகள். எனக்கு தெரியும் ரோஹித் சர்மா சிறப்பாக ஆட்டத்தை மட்டுமே விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி அவரை பல வீரர்களை மற்றும் ரசிகர்கள் அவரை ஆதரித்து கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட் போதுமான அளவிற்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார், அதனால் அதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும். நம்பிக்கை கைவிட கூடாது என்பது தான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டு முன்னேறி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சமீபத்தில் நடந்த தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா கையில் பலமாக அடிபட்ட காரணத்தால் அவரால் விளையாட முடியாமல் போனது. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் இந்திய அணியை வழிநடத்தி வந்தார்.

அதில் இந்திய அணி 0 – 3 என்ற கணக்கில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி. அதில் கேப்டன்ஷி சரியில்லையா ? வீரர்கள் சரியில்லையா ? என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆவது இந்திய அணி வெல்லுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here