அரை இறுதி போட்டியில் வென்று ; இறுதி போட்டியில் வெல்ல போகும் அணி இதுதான்; டிவில்லியர்ஸ் உறுதி ;

0

உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இதுவரை நடைபெற்று முடிந்த பேட்டிகளில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்திய மற்றும் பாகிஸ்தான் போன்ற நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று முதல் போட்டி நடைபெற உள்ளது.

அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை காட்டிலும் நியூஸிலாந்து அணி சற்று வலுவாக இருக்கிறது தான் உண்மை. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் விக்கெட்டை கைப்பற்றினால் பாகிஸ்தான் அணியை சுலபமாக வென்றுவிடாமல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒருவேளை தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினால் நிச்சியமாக நியூஸிலாந்து அணிக்கு ஆபத்தாக தான் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நியூஸிலாந்து வீரரான கான்வே, கிளென் பிலிப்ஸ், பின் ஆலன் போன்ற வீரர்கள் இருப்பதால் பேட்டிங் பிரச்சனையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமென்று அனைத்து நான்கு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இருந்தாலும் இந்திய அணி தான் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியை வெல்லும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் கூறுகையில் ; “இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 2022 போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அதில் இந்திய அணி தான் வெல்லும் என்று கூறியுள்ளார்.”

இந்திய அணிக்கு வெல்லும் வாய்ப்புகள் இருக்கிறதா ?

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதி போட்டிகளில் மட்டும் சொதப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பையில் தான் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தேர்வாகிய நிலையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.

ஆனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக இருக்கிறது. அதனால் இங்கிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்திய ? உங்கள் கருத்து ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here