இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி களமிறக்கிய வீரர் இவர் தான் ; இவர் ரொம்ப Danger..! ; குழப்பத்தில் இந்திய ?

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 போட்டிகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர போகின்றனர். இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் விறுவிறுப்பாக அமைய அதிகவாய்ப்புகள் உள்ளது.

இந்திய அணி:

எப்பொழுது லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி போன்ற முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருவது வழக்கம் தான். ஆமாம், சமீபத்தில் நடந்து முடிந்தஆசிய கோப்பைக்கான போட்டியிலும் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் வெளியேறியுள்ளனர்.

அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் எப்படி விளையாட போகிறது இந்திய அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் நாளை மதியம் நடைபெற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ப்ளேயிங் 11 வீரர்கள் தான் அரையிறுதி சுற்றிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளனர்…..!

அரையிறுதி சுற்றில் இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் இருக்கிறதா ?

லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய. ஆனால் இந்திய அணிக்கு இன்னும் தொடக்க ஆட்டம் மட்டும் சரியாக அமையவில்லை. ரோஹித் சர்மா ஒரு போட்டியில் 50க்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர். ஆனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் பேட்டிங் வலுவாக அமைய வாய்ப்பு இருக்காது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்-ஐ மட்டுமே வைத்து பேட்டிங்-ஐ கணக்கிட முடியாது. அதேபோல பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் சிறப்பாக செய்து வருகின்றனர். அதனால் பேட்டிங் மட்டும் வலுவாக இருந்தால் நிச்சியமாக அரையிறுதி சுற்றில் வெல்ல அதிகவாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்து அணி களமிறக்கிய புதிய வீரர் இவர் தான் :

தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இங்கிலாந்து அணியின் டேவிட் மலனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இனிவரும் போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பில் சால்ட் இங்கிலாந்து அணியின் ப்ளேயிங் 11ல் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 11 டி-20 சர்வதேச போட்டியில் விளையாடிய பில் சால்ட் 235 ரன்களை அடித்துள்ளார். அதில் இரு அரைசதம் அடங்கும். அதுவும் பில் சால்ட் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு இருக்குமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here