நான் கேப்டன் பதவியில் இருந்து விலக இதுதான் காரணம் ; விராட்கோலி சொன்ன காரணம் தெரியுமா? முழு விவரம் இதோ ;

Viratkohli: கடந்த 2017ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு பிறகு கேப்டன் பொறுப்பேற்றார் விராட்கோலி. இதுவரை 90 டி-20 போட்டிகளில் விளையாடிய விராட்கோலி 3159 ரன்களை அடித்துள்ளார். அனால் டி-20 போட்டிகளில் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று விராட்கோலி டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு என்ன காரணம் ?

விராட்கோலி மூன்று விளையாட்டிலும் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விராட்கோலி பேட்டிங் செய்வதும் ரன்களை எடுப்பதும் கடினமாக இருந்துள்ளது. ஆனால் சிறப்பான முறையில் இந்திய அணியை வழிநடத்தி வந்தார் விராட்கோலி. அதுமட்டுமின்றி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதி வரை இந்திய அணிக்கு வழிகாட்டியுள்ளார்.

இப்பொழுது அவர் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.அதற்கு என்ன காரணம் என்று பல கேள்விகள் எழுந்தனர். அதற்கு பதிலளித்த விராட்கோலி, நான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

எனக்கு துணையாக இருந்த அனைவரும் மிக்க நன்றி. கடந்த 8 – 9 ஆண்டுகளாக நான் அனைத்து விளையாட்டிலும் (ஒருநாள், டி-20, டெஸ்ட்) விளையாடி வருகிறேன். அதுவும் கடந்த 5 – 6 ஆண்டுகளாக கேப்டனாகவும் இருக்கிறேன். அதனால் எனக்கு கொஞ்சம் ஆவது ஓய்வு தேவை படுகிறது.

அதனால் தான் நான் டி-20 கேப்டனாக பதவி இருந்து விலகினேன். இந்த முடிவுக்கு வர நான் பல நாட்கள் யோசித்தேன். பின்பு ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா போன்ற எனக்கு நெருக்கமான நம்பர்களுடன் பேசி தான் இந்த முடிவு வந்தேன். அதனால் உலகக்கோப்பை டி-20 போட்டிக்கு பிறகு நான் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிடுவேன்.

இதனை பற்றி நான் பிசிசிஐ உறுப்பினர்கள் இடம் சொல்லிவிட்டேன். ஆனால் நான் இந்திய அணிக்கு பெருமை சேர்க்க நான் இறுதி வரை பாடுபடுவேன் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விராட்கோலி.

வருகின்ற அக்டோபர் 17ஆம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு பதிலை ஐக்கிய அரபு நாட்டில் இந்த முறை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.