நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிக ரன்களை எடுத்து கொடுத்துள்ளார்.
அதில் கே.எல்.ராகுல் 91 ரன்கள், ப்ரபிசிம்ரான் 7 ரன்கள், கிறிஸ் கெய்ல் 46 ரன்கள், பூரான் 0 ரன்கள், தீபக் ஹூடா 5 ரன்கள், ஷாருக்கான் 0 ரன்கள், ஹார்ப்ரீட் 25 ரன்கள் எடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்த நிலையில் 179 ரன்களை விளாசியுள்ளனர்.
பின்பு 180 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்கத்தில் இரண்டு விக்கெட் சரியாக ரன்களை எடுத்தாலும், அதன் பின்னர் பெங்களூர் அணிக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை.
அதனால் 20 ஓவர் வரை போராடி 145 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் விராட் கோலி 35 ரன்கள், தேவ்தத் படிக்கல் 7 ரன்கள், ரஜத் பாடிடர் 31 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 0 ரன்கள், டிவில்லியர்ஸ் 3 ரன்கள், அஹ்மத் 8 ரன்கள், டேனியல் சாம்ஸ் 3 ரங்கள், ஜேமிசன் 16 ரன்கள்,மற்றும் ஹர்ஷல் படேல் 31 ரன்களை எடுத்துள்ளார்.
அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றி புள்ளிபட்டியலில் 5வது இடத்திலும் , தோல்வியை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3வது இடத்திலும் உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் 10வது ஓவரில் பேட்டிங் செய்த மேக்ஸ்வெல் எதிர்பாராத விதமாக, அவுட் ஆகிவிட்டார். 10வது ஓவரில் ஹார்ப்ரீட் வீசிய பந்தை பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் எதிர்கொண்டார்.
அதன் அடிக்க முயன்ற போது எதிர்ப்பாராத விதமாக..! ஸ்டம்ப் அவுட் ஆகிவிட்டார். ஆனால் முதலில் அவருக்கு அது அவுட் ஆகிவிட்டோமா ?? அல்லது விக்கெட் கீப்பர் கை ஸ்டும்ப்பில் பட்டுவிட்டதா என்ற சந்தேகத்துடன்.. பார்க்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது..!
இதுவரை மேக்ஸ்வெல் , ஐபிஎல் 2021யில் 6 போட்டிகளில் விளையாடி 223 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 78 ரன்களையும், 10 சிக்சர் மற்றும் 21 பவுண்டரி போன்றவற்றை அடித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இவர் தான் அதிகமான 223 ரன்களை அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் டிவில்லியர்ஸ் 207 ரன்கள், விராட் கோலி 198 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள்.