விராட் கோலி உண்மையாவே பெரிய மனுஷன்..பா…! நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், செய்த செயலால்..! ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்…!!

ஐபிஎல் 2021, தொடரின் 26வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.  செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க  அமைத்துள்ளது. அதனால் பஞ்சாப் கிங்ஸ் எடுக்க முடிந்தது. கே.எல்.ராகுல்  அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் இணைந்து 100 மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 91 ரன்கள், ப்ரபிசிம்ரான் 7 ரன்கள், கிறிஸ் கெயில் 46 ரன்கள்,  நிக்கோலஸ் பூரான் 5 ரன்கள், தீபக் ஹூடா 5 ரன்கள், ஹார்ப்ரீட் 25ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. தொடக்கத்தில் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினாலும், அதன்பின்னர் பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் பெங்களூர் அணிக்கு தொடர்ந்து விக்கெட் இழந்ததால், 8வ் விக்கெட் இழந்த நிலையில் 145 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ் அணி. வெற்றியை கைப்பற்றிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3வது இடத்திலும் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் ஹார்ப்ரீட் முக்கியமான முன்று விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதில் விராட் கோலி , மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். போட்டி முடிந்த பிறகு விராட் கோலி செய்த செயலால், ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

அவருக்கு கை குலுக்கி, வாழ்த்துக்கள் சொல்லி, அவரிடம் சிரித்துபேசிக்கொண்டார்.. தன் விக்கெட்டை இவர் எடுத்துவிட்டார் என்ற எந்த கோபமும் இல்லாமல், நிதானமாக அவரிடம் பேசியுள்ளார், விராட் கோலி. அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.